2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கடற்கரை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் சங்கமும் இணைந்து உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பாசிக்குடா கடற்கரை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

பாசிக்குடா த ஹாம் ஹோட்டல் பொது முகாமையாளர் சுசந்த பன்டார தலைமையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வில், பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் எம்.எச்.எம்.மாஹீர், பாசிக்குடா அமாயா ஹோட்டல் பொது முகாமையாளர் எஸ்.பிரியங்கர, பாசிக்குடா மாலு மாலு ஹோட்டல் பொது முகாமையாளர் எஸ்.றொசான், ஹோட்டல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, கடற்கரையில் காணப்பட்ட உக்காத பொருள்கள் அகற்றப்பட்டன.

வாழைச்சேனை பிரதேச சபையினர் கடற்கரையை சுத்தம் செய்யும் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளதுடன், கடற்கரைக்கு வரும் உள்ளூர் பயணிகளால் அதிகமாக உட்காத பொருள்கள் வீசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X