2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதிங்கி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பட்டை 02 சித்திவிநாயகர் கோவிலுக்கு முன்பாக உள்ள கடற்கரையோரம் சடலம் கரையொதிங்யதை கண்ணுற்ற பொதுமக்கள், அப்பகுதி கிராம சேவையாளர் மற்றும் திருக்கோவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிராம சேவையாளர், பொலிஸார் மற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்கள் சடலத்தை பார்வையிட்டனர்.

 இவ்வாறு கரையொதிங்கிய சடலமானது, தம்பிலுவிலைச் சேர்ந்த பி.ஜெயகாந்தன் என்றும் அவர் வவுனியா விவசாயக் கல்லூரி விரிவுரையாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X