2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கடற்கரையில் சிரமதானம்

Freelancer   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் ஹனீபா

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை அண்டியுள்ள கடற்கரை பிரதேசத்தை சுத்தப்படுத்தும் சிரமதான பணியும் மரம் நடுகையும் புதன்கிழமை (01) நடைபெற்றன.

அம்பாறை மாவட்ட செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன இணைந்து, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் தலைமையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வில், அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் வீ். ஜெகதீசன், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.எம் சாபீர், சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எம் இஸ்மாயில்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார், கடலோரம் பேணும் திணைக்களத்தின் அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அட்டாளை்சேனை பிரதேச சபையினர் ஆகியோர் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்தனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X