2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கடலரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 20 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்;.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல் 

அம்பாறை, ஒலுவில் கிராமத்தில் ஏற்பட்டு;ள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், இக்கடலரிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் மக்கள் படும் துயரத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று பார்வையிட வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அந்தக் கடிதத்தில் 'ஒலுவில் கிராமம் கடலரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது. அக்கிராம மக்களின் பல குடியிருப்புகளும்; நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலமும் கடலுக்குள் சென்றுவிட்டன. அத்துடன்,  பல கட்டடங்கள் கடலில் மூழ்கியுள்ளன. எனவே, இக்கடலரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின்; பின்னரே ஒலுவில் கிராமம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடல்நீர் குடியிருப்புகளை நோக்கிச் செல்வதால், அக்கிராம மக்கள் மிகவும் அச்சத்திலுள்ளனர்.  

மேலும், இக்;கிராமத்திலுள்ள அதிகளவானோர் கடற்றொழிலையே ஜீவனோபாயத் தொழிலாக  செய்து வந்தனர். இக்கடலரிப்புக் காரணமாக  மீனவர்களும் தொழில் செய்ய முடியாத இக்கட்டான நிலைமைக்குள்ளாகியுள்ளனர். இதனால், அவர்கள் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்' என்றார்.

'இந்த நிலைமை நீடிக்குமானால், மிகவும் மோசமான விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன' எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X