Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 28 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
அம்பாறை, ஒலுவில் கிராமத்தை கடலரிப்பிலிருந்து காப்பாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் உலமாக் கட்சி, வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஒலுவில் துறைமுகத்தை கப்பல்கள் வந்துசெல்கின்ற வர்த்தகத் துறைமுகமாக செயற்படுத்தாமல், அத்துறைமுகத்தை மீன்பிடிப் படகுகளுக்கான தரிப்பிடமாக மட்டும் செயற்படுத்த வேண்டுமென்பதுடன், அதன் விஸ்தரிப்புப் பணியை நிறுத்த வேண்டுமெனவும் உலமாக் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;, 'ஒலுவில் கிராமம்; அழகிய, பாரம்பரிய கலாசாரத்தைக் கொண்ட கிராமமாகும். தற்போது இக்கிராமம் கடலரிப்பினால் பாதிக்கப்படுவது கவலைக்குரியதாகும்.
ஒலுவில் துறைமுகமானது தூரநோக்கற்ற சிந்தனையென்று அது பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்ற அக்காலத்தில் கூறப்பட்டது. ஆனாலும், முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், அம்பாறை மாவட்ட மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டுமென்ற நோக்கத்தில் ஒலுவில் துறைமுகம் அமைவதை ஆதரித்தார்' என்றார்.
'ஒலுவில் துறைமுகத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் சிலருக்கு இன்னமும் நிவாரணம் வழங்கப்படவில்லை.
கடந்த ஆட்சிக்காலத்தில் உலமாக் கட்சி இது தொடர்பில் குரல் எழுப்பியதுடன், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவரை கொண்டுசென்றதால் சிலருக்கு மட்டும் நிவாரணம் கிடைத்தது. ஆனால், சிலருக்கு இன்னமும் நிவாரணம் கிடைக்கவில்லை' எனவும் அவர் மேலும் கூறினார்.
38 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
54 minute ago
1 hours ago