2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கடலரிப்பு; நிந்தவூரில் கருங்கலில் தடுப்புச் சுவர்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு கருங்கலிலான தடுப்புச் சுவரை நிர்மாணிப்பதற்கு கடல் ஓரம் பேணல் மற்றும் கடல் மூல வள முகாமைத்துவ திணைக்களத்தால் நிதியொதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதல் கட்டமாக 100 மீற்றர் கருங்கல் தடுப்புச் சுவர் நிர்மாணிப்பதற்கு 01 கோடி 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, நிந்தவூர் பிரதேச செயலாளர் டி.எம்.எம். அன்சார் தெரிவித்தார்.

நிரந்தரமாக கடலரிப்பைத் தடுப்பதற்கு 250 மீற்றர் கருங்கல்லிலான தடுப்புச் சுவர் நிர்மாணிப்பதற்கு 02 கோடி ரூபாய் செலவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வருடத்துக்குள் தடுப்புச் சுவர் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடலரிப்பை தடுப்பதற்கு முதற்கட்டமாக மண் மூடை இடவுள்ளதாகவும், நிரந்தரமாக கடலரிப்பைத் தடுப்பதற்கு கருங்கல்லிலான தடுப்புச் சுவர் நிர்மாணிப்பதற்கான திட்ட வரைபு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிந்தவூர் பிரதேச செயலாளர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .