2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கடலரிப்பைத் தடுக்க கற்வேலிகள் அமைப்பு

எஸ்.கார்த்திகேசு   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்துக்கு முன்பாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கடலரிப்பைத் தடுத்து, ஆலயத்தைப் பாதுக்காக்கும் வகையில், கற்வேலிகள் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்துக்கு முன்பாக பாரிய கடலரிப்பு ஏற்பட்டு, ஆலய வளாகத்துக்கு கடல் நீர் உட்புகுந்ததுடன், வீதியும் சேதமடைந்தது.

 இந்நிலையில், கரையோரம் பேணல் மூலவளத் கரையோர முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகளில் அடிப்படையில் தற்போது சுமார் 120 மீற்றர் தூரம் கற்வேலிகள் அமைக்கப்பட்டு வருவதுடன், இது 20 வருடங்களுக்கு கடலரிப்பைத் தடுக்கக் கூடியதாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .