Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஜூலை 05 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெளவாளோடை பகுதியில் ஏற்பட்டுள்ள தொடர் கடலரிப்புக் காரணமாக கடற்கரையை அண்டிய தென்னம் தோப்புகள் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் மீன்பிடி வாடிகளும், மீனவ உபகரணங்களும் காவு கொள்ளப்பட்டு வருவதாக மீனவா்கள் தொரிவிக்கின்றனர்.
இத்தொடர்ச்சியான கடலரிப்புக் காரணமாக, தங்களது அன்றாட மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரவு வேளையில் நிம்மதியின்றி உறங்குவதாகவும், எந்நேரத்திலும் தமது உடமைகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்திலும் இருப்பதாக மீனவர்கள் தொரிவிக்கின்றனா்.
தற்போது மீன்பிடிப் பருவக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், கடலரிப்புக் காரணமாக நிலத்திலிருந்து சுமார் எட்டு தொடக்கம் பத்து அடிக்கு கடலரிப்பு உயரமாகக் காணப்படுவதனால், கடலுக்கு வள்ளங்களைச் செலுத்துவதிலும், கரைசேர்ப்பதிலும் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதோடு, தங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர சென்ற வருடமும் இந்த பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பால் அதிகமான தென்னை மரங்களும் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டன. இவ் வருடமும் இது தொடர்ந்த வண்ணமாக இருப்பதனால் மேலும் இப்பகுதி மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நிந்தவூரில் ஏற்படும் தொடர் கடலரிப்பைத் தடுப்பதற்கு இப்பகுதி அரசியல்வாதிகள் எவ்வித நிலையான நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பதுடன், விரைவில் இதனை முறையாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
3 hours ago
3 hours ago