Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா, அப்துல்சலாம் யாசீம்
காரைதீவிலிருந்து ஆழ்கடலுக்குச் சென்று காணாமல்போன சாய்ந்தமருது, காரைதீவைச் சேர்ந்த மூன்று மீனவர்களில், காரைதீவு மீனவர் மரணமடைந்துள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது 47) என்பவரே, ஆழ்கடலில் வைத்து மரணமானதாகக் கூறப்பட்டுள்ளது.
இவர், கடலுக்குச் சென்று 10ஆவது நாளில் அதாவது 28ஆம் திகதி மரணித்துள்ளாரெனவும் இரு நாள்களின் பின்னர் சடலத்தைக் கடலுக்குள் போட்டதாகவும், சக மீனவர்களான சாய்ந்தமருதைச் சேர்ந்த சீனி முகம்மது ஜூனைதீன் (வயது 36), இஸ்மாலெவ்வை ஹரீஸ்(வயது 37) ஆகியோர் கூறியுள்ளனர்.
அந்த இரு மீனவர்களும் சிகிச்சைக்காக, திருகோணமலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களை, சொந்த ஊரான சாய்ந்தமருதுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, இந்த இரு மீனவர்களது அலைபேசி உள்ளிட்ட பொருள்கள், விசாரணையின் பொருட்டு தம்வசம் வைத்திருப்பதாகக் கூறிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேற்படி மீனவர்கள் சென்ற இயந்திரப்படகு, சர்வதேசக் கடற்பரப்பில் 21 நாள்களின் பின்னர், நேற்று முன்தினம் (08) மாலை தென்பகுதி மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago