Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 23 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு கடலோரத்திலுள்ள சட்டவிரோதக் கட்டடங்களும் மீன்வாடிகளும் இன்று (23) அகற்றப்பட்டன.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் ஒரு மாதத்துக்கு முன்னரே பிரதேச செயலகத்தால் மீனவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அந்த அறிவித்தலுக்கமைவாக, அநேகமான மீனவர்கள் தத்தமது கட்டடங்களை அகற்றியிருந்தனர்.
அவ்விதம் அகற்றப்படாத கட்டங்களே, பிரதேச சபையின் கனரக வாகனங்கள் மூலம் இன்று காலை தகர்க்கப்பட்டன.
இதன்போது, கட்டடத்தை திடீரென அகற்ற முடியாது என தவிசாளர், பிரதச செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு சில மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கட்டடங்களை அகற்றும் பணி ஒரு சில நிமிடங்கள் தடைபட்டிருந்தன. எனினும், சட்டத்தின்படி அவற்றை அகற்றவேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் சுட்டிக்காட்டியதையடுத்து, அவற்றை நாளையதினம் அகற்றுவதற்கு மீனவர்கள் இணங்கினர்.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி எம்.எஸ்.எ.மகுறூப், காணி உத்தியோகத்தர் இரா.ரமேஸ், பொலிஸார் ஆகியோர் இங்கு சமுகமளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
44 minute ago
55 minute ago
2 hours ago