2024 மே 09, வியாழக்கிழமை

கடல் அரிப்பை தடுப்பதற்கான வழிகள் ஆராய்வு

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம். ஹனீபா

நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பைத் தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்டக் கூட்டம், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தலைமையில், நிந்தவூர் பிரதேச சபையில் நேற்று (22) இடம்பெற்றது.

இதன்போது கடலரிப்பை தற்காலிகமாக தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து  கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பொறியியலாளர் விளக்கமளித்தார்.

அத்துடன், கடலரிப்புக்கு உள்ளாகும் பிரதேசங்களையும் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத் தொழில் முயற்சிகளையும் மேலும் அழிவடையாத வண்ணம் பாதுகாத்து மீளக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை, நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர், அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.

அத்துடன், கடல் அரிப்பை தடுப்பதற்காக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான எரிபொருள் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியை பிரதேச சபை நிதியிலிருந்து வழங்குவதாகவும் இதனைக் கொண்டு வேலைகளை துரிதப்படுத்துமாறும் பொறியியலாளரை, தவிசாளர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கான கருங்கல்லிலான அணைக்கட்டு நிர்மாணிப்பதற்கு கடல்லோரம் பேணல் மற்றும் கடல் மூல வள முகாமைத்துவ திணைக்களத்தால் முதல் கட்டமாக 10 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .