2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கடையை உடைத்த காதலன் கைது: கவலையுடன் காதலி

Mayu   / 2024 பெப்ரவரி 25 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது காதலியுடன் விடுமுறையை கழிப்பதற்கு பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞனொருவர் விடுதிக்கு செலுத்த பணம் இல்லாத காரணத்தினால் கடையொன்றில் 10,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை பஸ் நிலையத்தில் யுவதியை இருக்குமாறு தெரிவித்து  நகரின் பிரபல மொத்த விற்பனை நிறுவனத்திற்குள் நுழைந்த குறித்த இளைஞன் பணத்தை திருடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இளைஞனுடன் சென்ற யுவதியை பெற்றோரிடம்  ஒப்படைத்த பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X