Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.என்.எம்.அப்ராஸ்
பீகாஸ் (BCAS) கெம்பஸின் 20 வருட பூர்த்தியை முன்னிட்டு, அதன் கல்முனை வளாகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள உயர்கல்விக் கண்காட்சி, இவ்வளாகத்தில், நாளையும் (12) நாளை மறுதினமும் (13) காலை 08 மணி தொடக்கம் மாலை 05 வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் எல்.கே.ஜீ.முத்து பண்டா பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வு தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு, கல்முனை வளாகத்தில், அதன் முகாமையாளர் என்.ரி.ஹமீட் அலி தலைமையில் நேற்று (10) மாலை நடைபெற்ற போது, கண்காட்சியில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பிலும் அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து, இரத்ததான முகாமையும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அனுசரணையுடன், இலவச மருத்துவ முகாமையும் ஒழுங்கு செய்திருப்பதாகவும் ஆர்வமுள்ளவர்கள் வருகைதந்து, குருதி நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொண்டதுடன், நீரிழிவு, உயர்குருதி அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளை சம்மந்தப்பட்டோர் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago