2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கண்டன பேரணி

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சகா

முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற கட்டளைதிப்பு செய்த பேரினவாத பௌத்த அமைப்புக்கெதிராக  அம்பாறை - காரைதீவு பிரதேசத்தில், இன்று கண்டன பேரணி இடம்பெற்றது .

இன்று ( 27) காலை 10 மணியளவில், இந்தப் போராட்டமானது வடக்கு - கிழக்கு சிவில் அமைப்புகளும் பொதுமக்களாலும் முன்னெடுக்கப்பட்டது.    

சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துக, அனைத்துவிதமான பாரபட்சங்களை ஒழிக்குக இசிறுபான்மையினர் மீதான துஷ்பிரயோகங்களை நிறுத்துக போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது.   நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதிதுறையை அவமதித்த தேரர்களை கைது செய்யகோரியும் இந்து கோவில்களின் புனித தன்மையை பாதுகாக்குமாறு தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது காரைதீவு சுவாமி விபுலாநந்தர் சதுக்கத்திலிருந்து பேரணியாக காரைதீவு பிரதேச செயலகம் வரை சென்று மீண்டும் சுவாமி  விபுலாநந்தர் சதுக்கத்தை வந்தடைந்து.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர்இஸ்ஸதீன் லத்தீப்பிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. 

இந்த கண்டன பேரணியில்  வடக்கு - கிழக்கு சிவில் அமைப்பினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X