2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கண்டுபிடிப்பாளர் போட்டி; அரையிறுதிக்குத் தெரிவு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் ஆசிய பசுபிக் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து, அகில இலங்கை ரீதியாக பாடசாலை மாணவ இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியை அண்மையில் நடத்தியிருந்தது. 

இந்தப் போட்டியில் முதலாவது சுற்றுக்கு அகில இலங்கை ரீதியாக 200க்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து பங்குபற்றியிருந்தனர். அவர்களில் 18 மாணவர்கள் இரண்டாம் சுற்றோடு இணைந்த அரை இறுதிச் சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
 
18 மாணவர்களில் ஒருவராக கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் மாணவனான அப்துல் ஹபீஸ் சனூஸ், இந்தப் போட்டியில் தனது கொவிட் -19 உடன் தொடர்பான புதிய கண்டுபிடிப்பை சமர்ப்பித்து, அரை இறுதிச் சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

இம்மாணவன், சாய்ந்தமருதைச் சேர்ந்த டொக்டர் சனூஸ் காரியப்பர் - டொக்டர் கரீமா சனூஸ் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .