2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கதவை பூட்டி மக்கள் போராட்டம்

Mayu   / 2024 ஜூன் 24 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும்  தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்களாக அமைதி வழியில் போராடி வருகின்றனர்.

92 ஆவது நாளாகிய திங்கட்கிழமை (24)  கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர். செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய மக்கள் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் உரிய உயர் அதிகாரிகளும் அரசும் எமக்கு தீர்வை தர வேண்டும் எனும கோஷத்துடன் பெருந்திரளாக குவிந்துள்ளன​ர்.

மேலும், பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 92 ஆவது நாளான இன்றும் அதிகளவான மக்கள்   பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பவணியாக செல்வதுடன் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

பாறுக் ஷிஹான் 



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X