2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி

Editorial   / 2019 ஜூன் 15 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

அம்பாறை,காரைதீவு பகுதியில், நேற்று மாலை, இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக, குறித்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர், காரைதீவு, வடிவேல் வீதி, 12இல் வசிக்கும் ஒரு ஒரு பிள்ளையின் தந்தையான ஞானசேகரம் ரதாஸ் (27 வயது) என்பவராவார்.

உயிரிழந்த நபரின் சடலம் காரைதீவு வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .