Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
லோ.கஜரூபன், வி.சுகிர்தகுமார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையில் நேற்று (03) பிற்பகல் நடைபெற்ற வடக்கு, கிழக்கு ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கு தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், பொத்துவில், கனகர் கிராம 60ஆம் கட்டை காணிப் பிரச்சினை தொடர்பாக தடவையாக ஜனாதிபதியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து கருநத்துத் தெரிவித்த கோடீஸ்வரன் எம்.பி, கனகர் கிராம மக்களின் ஜனநாயகப் போராட்டம் வெயிலும் மழையிலும் குழந்தைகள், முதியவர்கள், கற்பிணிப் பெண்கள் எனப் பலரும் போராடிவருகின்ற நிலையில், இது தொடர்பில் நான் உங்களிடம் ஏற்கெனவே விளக்கியிருந்தேன் என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.
இருப்பினும், அதற்குத் தீர்வு கிடைக்காத நிலையில், இரண்டாவது தடவையாக இது குறித்து உங்களிடம் பேசுவதாகவும் அவர் ஜனாதிபதிக்குத் தெரிவித்தார்.
இதனையடுத்து, கனகர் கிராம பிரச்சினை தொடர்பாக தீர்வை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிய பின்பும் அவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை ஏன் என, ஜனாதிபதி, அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.
அப்போது, அம்பாறை மாவட்ட செயலாளர், ஆவணங்கள் இருப்பவர்களை குடியேற்றுவதாகக் குறுக்கிட்டுப் பேசிய போது, அவரை இடைமறித்துப் பேசிய கோடீஸ்வரன் எம்.பி, இந்த மக்கள், யுத்தத்தாலும் சுனாமியாலும் இடம்பெயர்ந்து, ஆவணங்களை இழந்து நிற்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஆவணங்களைக் கேட்டு அப்புறபடுத்த நினைக்கின்றீர்கள் என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், இவர்களுக்கான ஒரு நிரந்தத் தீர்வை நீங்கள் அடுத்த கூட்டத் தொடருக்கு முன்னர் பெற்றுதர வேண்மென்றும் இல்லாவிடின், இதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போமென்றும் ஜனாதிபதியிடம் காரசாரமாகக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து நியாயமானதாகும். எதிர்வரும் 08ஆம் திகதிக்கு முன்னர், அத்தாட்சி மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு ஆவணங்களை வழங்கி, மக்களுக்கான ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
52 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
4 hours ago