2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கனகர் கிராம மக்கள் பூர்வீக காணிகளில் குடியேறினர்

Editorial   / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி சகாதேவராஜா, ஆர். ஜெயஸ்ரீராம்

அம்பாறை மாவட்டத்தின் கனகர் கிராம மக்கள் 32 வருடங்களுக்குப் பின்னர்  தங்களது பூர்வீக் காணிகளில் குடியேறியுள்ளனர்.

 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின் காரணமாக, இடம்பெயர்ந்து மீளக்குடியேறுவதற்கு பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்த மக்கள், தற்போது தமது காணிகளை தாமாகவே முன்வந்து துப்புரவு செய்து வருகின்றனர்.

சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் பங்களிப்புடன் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு, மேற்படி   கிராமத்தின் காணிகளில் தானியச் செய்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.  தமது பூர்வீக காணிகளை துப்புரவு செய்துள்ள 25 பயனாளிகள், தானியச் செய்கைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயறு, சோளன், கச்சான் ஆகிய தானிய வகைகள் வழங்கப்பட்டன.

இதேவேளை,  அம்மக்களின் காணிகளில் அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தித் தரக்கோரி அரச திணைக்களங்களுக்கும் பரிந்துரை செய்யும் செயற்பாடு திட்டமிடப்பட்டது. இருந்தபோதிலும் அரசதிணைக்களங்கள், மக்கள் மீளக்குடியேறுவதற்கு எதிர்ப்பாக உள்ளமையால் மக்களாகவே முன் வந்து குடியேறியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், பல்வேறு தரப்பினராலும் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது சுமார் 50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அரசு மற்றும் பல்வேறு தரப்பினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X