2025 மே 22, வியாழக்கிழமை

கருத்தரங்கு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 28 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் எதிர்வரும் 31ஆம் திகதி கல்முனை பரடைஸ் மண்டபத்தில் மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்படவிருந்த கருத்தரங்கு, தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.ஹில்மி முஹம்மத், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தனித்தனியாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கருத்தரங்கு நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டி அதன் மூலம் மக்களுக்கு அறிவூட்டும் நோக்கில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இக்கருத்தரங்குக்கு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X