2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கரைவலைகளில் அகப்பட்டுள்ள கீரி மீன்கள்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

அம்பாறை, காரைதீவு பிரதேசக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (13) அதிகளவான கீரி மீன்கள் கரைவலைகளில் பிடிபட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்கள் சுமார் 30 இலட்சம் ரூபாய் வரை மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக கரைவலை மீன்பிடி நடவடிக்கையில் அதிகளவான  மீன்கள் பிடிபட்டுள்ளன. குறிப்பாக காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை போன்ற  கரையோரப் பிரதேசங்களிலேயே மீன்கள் அதிகளவில் பிடிபடுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X