2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கல்முனை, சம்மாந்துறையில் 446 மாணவர்கள் சித்தி

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.எஸ்.எம்.ஹனீபா

2016ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை, கல்முனைக் கல்வி வலயத்தில் 322 மாணவர்களும் சம்மாந்துறைக் கல்வி வலயத்தில் 124 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள கல்முனை முஸ்லிம் கல்விக் கோட்டத்தில் 114 மாணவர்களும் கல்முனை தமிழ் கல்விக் கோட்டத்தில் 99 மாணவர்களும் நிந்தவூர்க் கோட்டத்தில் 39 மாணவர்களும் சாய்ந்தமருதுக் கோட்டத்தில் 35 மாணவர்களும் காரைதீவுக் கோட்டத்தில் 35 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளதாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.

இதேவேளை, சம்மாந்துறைக் கல்வி வலயத்திலுள்ள சம்மாந்துறை கல்விக் கோட்டத்தில் 97 மாணவர்களும் நாவிதன்வெளிக் கோட்டத்தில் 15 மாணவர்களும இறக்காமம் கோட்டத்தில் 12 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X