Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்குத் தனியான பிரதேச சபை வழங்கப்படுவதில் தமிழ் மக்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும், கல்முனைத்தொகுதியிலுள்ள தமிழ்க் கிராமங்களை 03 சபைகளாகக் கூறுபோட மேற்கொள்ளும் சதி வேலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக் கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கென்றி மகேந்திரன் தெரிவித்தார்
இவ்விடயம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு, அவரது இல்லத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கான தனியான பிரதேச சபையை உருவாக்க வேண்டும் என்பதில் அப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களும் புத்திஜீவிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கை நியாயமானது என்பதுடன், தனிப் பிரதேச சபையை நிறுவுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என்றார்.
'கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, கல்முனைப் பிரதேச சபை பிரிக்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பேசியுள்ளார். அதாவது, சாய்ந்தமருதுக்குத் தனியான பிரதேச சபை வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கல்முனைத்தொகுதியிலுள்ள கல்முனைக்குடி, கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணைக் கிராமங்களை ஒன்றிணைத்து 03 சபைகளாக்க வேண்டும் என்றும் அதாவது கல்முனைக்குடி, கல்முனை ஆகிய 02 கிராமங்களையும் உள்ளடக்கி மாநகர சபையாகவும் நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு ஆகிய 03 கிராமங்களையும் உள்ளடக்கி ஒரு பிரதேச சபையாகவும் மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை ஆகிய 03 கிராமங்களையும் உள்ளடக்கி மற்றுமோர் பிரதேச சபையாகவும் பிரக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
சாய்ந்தமருது பிரிந்து தனியான பிரதேச சபையாக மாறினாலும், கல்முனைத்தொகுதியில் வாழ்கின்ற தமிழ் மக்களாகிய நாம் ஒரு சபையின் கீழ் வாழ விரும்புகின்றோம். ஆனால், இங்குள்ள தமிழ் மக்களின்; சம்மதத்தை, அபிப்பிராயத்தைக் கேட்காது 03 பிரிவுகளாகப் பிரிப்பதற்குச் செய்யும் சதி வேலையை நாங்கள் விரும்பவில்லை.
1989ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையும் உப பிரதேச செயலகமாக செயற்படுகின்ற தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தித்தர வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை மழுங்கடிக்க வைக்கும் சதி முயற்சியாகும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago