Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்சான்
கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு இம்முறை வரவு- செலவுத்திட்டத்தில்; விசேட நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்ததாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கூட்டம், கல்முனை மாநகரசபை முதல்வர் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை நடைபெற்றது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கடந்த தேர்தல் காலத்தில் கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுமென்று பிரதமர் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், இத்திட்டத்துக்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய நகருக்கான வரைபடத்திலுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
புதிய நகருக்காக வயல் பகுதியில் சுமார் 800 ஏக்கர் காணியை நிரப்புவதற்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் எடுத்துக்கூறினார்.
அத்துடன், புதிய நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு தேவையான தொழில்நுட்ப விடயங்கள், சுவிகரிக்கப்படும் காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ள நஷ்டஈடு தொடர்பிலும் இங்கு விளக்கமளிக்கப்பட்டன.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago