Sudharshini / 2016 ஜூன் 08 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ் .மௌலானா
கல்முனை மாநகர சபையின் புதிய கணக்காளராக ஏ.எச்.தஸ்தீக் கிழக்கு மாகாண சபையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னர் கல்முனை மாநகர சபையில் கணக்காளராக கடமையாற்றி வந்த எச்.எம்.எம்.றஷீட், கிழக்கு மாகாண சபையின் பிரதம கணக்காய்வாளராக பதவியுயர்வு பெற்று சென்றதைத் தொடர்ந்து, இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் வர்த்தகத்துறை பட்டப்படிப்பில் விசேட சிறப்புத் தேர்ச்சி பெற்று, இலங்கை கணக்காளர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த ஏ.எச்.தஸ்தீக், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம், கல்முனை நீர்ப்பாசனத் திணைக்களம் என்பவற்றில் கணக்காளராக கடமையாற்றியுள்ளார்.
14 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
2 hours ago