Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 19 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
சுற்றுலாப் பயணிகளுக்கான நலனோம்பு நிலையம், கல்முனை நகரில் அம்மாநகர சபையின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ளது.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் எம்.நிஸாம் காரியப்பரின் வேண்டுகோளுக்கு அமைய, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் ஜவாத்தின் முயற்சியில், கிழக்கு மாகாண சபையால் இதற்காக 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை பிரதான பஸ் நிலையத்துக்கும் பொதுநூலகத்துக்கும் அருகில் இந்நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் அமைவிடத்தை கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, ஆசிய பவுன்டேஷன் நிகழ்ச்சித்திட்ட நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத், மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் ஜவாத்;, தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் திங்கட்கிழமை (18) சென்று பார்வையிட்டனர்.
இந்நிலையத்துக்கான கட்டடத்தொகுதி நிர்மாணம், அதில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன.
கல்முனை நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குத் தேவையான தகவலைப் பெறவும் இவர்களுக்கு அடிப்படை தேவைகளைத் செய்துகொடுக்கவும் இவர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுத்துச் செல்லும் வகையிலும் இந்நிலையம் அமைக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகர ஆணையாளர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
41 minute ago
1 hours ago