2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கல்விக்காக சிறை செல்லவும் தயார்

Niroshini   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மைத்துல்லா

எனது அரசியல் இருப்புக்கு சேறுபூசும் வகையிலே மட்டக்களப்பு மத்திய வலயக் கல்விப் பணிப்பாளர் என் மீது போலிக் குற்றச்சாட்டை சுமர்த்தி, எனக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு  செய்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

 அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இவ்வலயத்தின் கல்வி நடவடிக்கைகள் பின்தள்ளப்பட்டுக் காணப்படுகிறன. இவற்றை மக்கள் பிரதிநிதி என்றவகையில் தட்டிக்கேட்க முற்படுகின்ற போது வீன்குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. என்னைப் பொருத்தவரையில் ஏழை மாணவர்களின் கல்வி விடயத்தில் அநியாயங்கள் நடைபெறும் போது தட்டிக்கேற்பதற்கும், கல்விக்காக சிறை செல்லவும் தயங்கமாட்டேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X