2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கல்முனை உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

வா.கிருஸ்ணா   / 2019 ஜூன் 22 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி, கடந்த திங்கட்கிழமை முதல், மதகுருமார்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுமென ஞானசார தேரர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து நால்வர் தமது போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன்,  நீரை மட்டும் அருந்தி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஏனையவர்களும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக, சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய மதுகுருமார்கள் அறிவித்துள்ளனர்.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று (22) 6ஆவது நாளாகவும் தொடர்ந்த நிலையில், இந்தப் போராட்டத்துக்கு, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தமது ஆதரவை வெளியிட்டுவந்தனர்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் போராட்டக்களத்துக்கு வந்து ஆதரவு வழங்கியிருந்தனர்.

இன்று போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உட்பட மகாசங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது குறுகிய காலத்துக்குள் கல்முனை பிரதேச செயலகத்தைதை் தரமுயர்த்த நடவடிக்கை தான் எடுப்பதாகவும் அவ்வாறு முடியாமல்போனால் இந்த போராட்டத்தை தனது தலைமையில் முன்னெடுப்பதாகவும் இதன்போது ஞாசார தேரரினால் உறுதியளிக்கப்பட்டது.

 

அதனைத்தொடர்ந்து, கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம் உட்பட நான்கு பேர் தமது போராட்டத்தை நீர் அருந்து முடிவுக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தமது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் வரையில் தமது சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.

இதேநேரம் தாங்கள் சாகும் வரையிலான உண்ணா விரதத்தினை முடித்துள்ள போதிலும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த நான்கு பேரும் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X