Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம்.அப்ராஸ், அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய “கல்முனை உள்ளூராட்சி நிர்வாகம்” எனும் நூல் வெளியீட்டு விழா, நாளை மறுதினம் (22) பிற்பகல் 4.15 மணியளவில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசிக் பரீத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டத்தின் ஏற்பாட்டில், முன்னாள் பட்டின சபைத் தலைவர் ஏ.எம். முகைதீன் பாவா முன்னிலையில், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.
கல்முனையின் 250 வருடகால உள்ளூராட்சி நிர்வாக வரலாறுகள், அவற்றுக்கான சான்றாதாரங்கள், புள்ளிவிவரங்கள், புகைப்படங்களை உள்ளடக்கிய 250 பக்கங்களைக் கொண்ட தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படுகிறது. இது நூலாசிரியர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ்வின் மூன்றாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
36 minute ago
46 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
46 minute ago
49 minute ago