Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2019 மே 13 , பி.ப. 02:24 - 1 - {{hitsCtrl.values.hits}}
கல்முனையில் இயங்கும் அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களும் கல்முனை மாநகர சபையில் உடனடியாக பதிவு செய்யப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான அவசரக் கலந்துரையாடலொன்று, இன்று (13), கல்முனை மாநகர சபை மேயர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில், அக்கல்வி நிலையங்களின் பொறுப்பாளர்கள் கூடிய கரிசனைச் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
இதன்பிரகாரம், அனைத்து தனியார் கல்வி நிலையங்களும், கல்முனை மாநகர சபையின் கீழ் உடனடியாக பதிவு செய்யப்படல் வேண்டும் என்றும் மாலை 5.00 மணியுடன், பிரத்தியேக வகுப்புகள் யாவும் நிறைவு செய்யப்படல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அத்தோடு, தனியார் கல்வி நிலையங்களில், உயர்தர வகுப்புகளுக்கு வருகை தருகின்ற உள்ளூர், வெளியூர் மாணவர்களின் பெயர் விவரங்களை, கல்முனை மாநகர சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்கள், மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குமாறும் கல்வி நிலைய வளாகத்துக்குட்பட்ட பகுதிகளில், மாணவர்கள் அல்லது வேறு நபர்களது சைக்களில், மோட்டார் சைக்களில் உள்ளட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
S.RASALINGAM Tuesday, 14 May 2019 03:38 PM
நல்ல விடயம் ஏனெனில் எனது மகனும் அங்கு கல்வி கற்கின்றான்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago
7 hours ago