Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வி.சுகிர்தகுமார் / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எனும் பதவி இல்லாமல் செய்யப்பட்டுள்ளதெனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், பதிலாக உதவிப் பிரதேச செயலாளர் எனும் பதவியே அங்குள்ளதெனவும், அவ்வாறே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டிருப்பதை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமர்சித்துள்ளார்.
"தம்பதி நல்லாள் தம்பிலுவில் ஊர் சிறப்பு" நூல் வெளியீட்டு விழாவும் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும், அம்பாறை, அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில், நேற்று (24) நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டும் என பல தடவைகள் பல்வேறு தரப்பினரிடத்திலும் கோரிக்கைகளைத் தான் முன்வைத்ததாகக் குறிப்பிட்டதுடன், நாடாளுமன்றத்திலும் விவாதித்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் பதவியை, உதவிப் பிரதேச செயலாளர் என்றே பயன்படுத்த வேண்டும் என, கடந்த சில நாள்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்ட செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளதென, ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டதாகக் குறிப்பிட்ட அவர், இச்செயற்பாடு, உடன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், கிழக்கு மாகாணத்தை, யாரும் கபளீகரம் செய்யலாம் என நினைத்தால், அதனை எதிர்த்துப் போராட, இங்குள்ள இளைஞர்கள் அச்சம் கொள்ளாமல் முன்வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
அதேநேரம், அம்பாறை மாவட்ட மக்களுக்கு ஏற்படும் அநீதிகளைத் தட்டிக்கேட்கும் நிலை, வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்து தமிழ் மக்களிடையேயும் உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025