2025 மே 05, திங்கட்கிழமை

கல்முனை நகர மண்டபத்தை பொது நிகழ்வுகளுக்கு வழங்க நடவடிக்கை

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை நகர மண்டபத்தை, பொது நிகழ்வுகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

இதன்பிரகாரம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கருத்தரங்குகள், கூட்டங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்காக, இந்த நகர மண்டபம், கல்முனை மாநகர சபையால் பொதுமக்களுக்கு வாடகைக்கு வழங்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்காக மாநகர சபையின் கணக்காளர் ஊடாக, மாநகர ஆணையாளரின் அனுமதியை முன்கூட்டி பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த நகர மண்டபம், கடந்த சில வருடங்களாக தனியார் நிறுவனமொன்றின் பாவனைக்காக குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில், அந்நிறுவனத்திடமிருந்து குறித்த கால அவகாசத்தில் நகர மண்டபம் மீளப் பெறப்பட்டு, அது புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X