Princiya Dixci / 2021 மார்ச் 08 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
றாசிக் நபாயிஸ், சர்ஜுன் லாபீர்
"நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் மகுட வசகத்தை அடிப்படையாகக் கொண்டு, உலகளாவிய ரீதியில் 110ஆவது சர்வதேச மகளிர் தினம், இன்று (08) கொண்டாடப்படுகின்றது.
இதனையொட்டி, கல்முனை பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யபட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம் சிபாயா தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி கலந்துகொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் முஹ்ஹரப், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி ஜனூபா நெளபல் உட்பட பிரதேட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .