2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘கல்முனை பிரதேச செயலகத்தை வைத்து அரசியல் செய்ய விடமாட்டேன்’

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல், இந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), “கல்முனை பிரதேச செயலகத்தை வைத்து அரசியல் செய்ய நான் இனி விட மாட்டேன்” என்றார்.

தமிழர் சுதந்திர ஐக்கிய முன்னணியின் பெரியநீலாவணை இளைஞர் அணியின் ஏற்பாட்டில், அம்பாறை - பெரிய நீலாவணை பொது  மண்டபத்தில், நேற்று  (29)  நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதியை விரைவில் மீண்டும் சந்திக்கவுள்ளதாகவும் புதிதாக உருவாக்கப்படவுள்ள  கல்முனை மத்தி கல்வி வலயம் தொடர்பாகத் தாம் இந்த அரசாங்கத்திடம் கேட்டு செய்துமுடிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புதிது புதிதாக மக்களைக் குழப்பி வருகின்றனர் எனக் குற்றஞ்சாட்டிய அவர், கோடிஸ்வரன் எம்.பிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கல்முனை பிரதேச செயலகத்தை வைத்து அரசியல் செய்ய தான் இனி விடமாட்டேன் எனவும் தெரிவித்தார்.

புதிய தலைமுறையை உருவாக்க, அம்பாறையில் நாம் ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் இனியாவது எம்முடன் இணைந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X