2025 மே 14, புதன்கிழமை

கல்முனை பொலிஸாருக்கு ’கொரோனா வைரஸ்’ விழிப்புணர்வு

Editorial   / 2020 மே 01 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ் 

COVID-19, 'கொரோனா வைரஸ்' தொற்று நோயானது சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கம், பொலிஸார் தமது கடமைகளின் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு, கல்முனை பொலிஸ் நிலைய வழாகத்தில் நேற்று (29)  நடைபெற்றது.

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தர தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த, சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட் உட்பட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், தமது உயிரையும் பொருட்படுத்தாது சேவையில் ஈடுபட்டுள்ள படை வீரர்களை பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பாகும் என்று இங்கு உரையாற்றிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X