2024 மே 20, திங்கட்கிழமை

கல்முனை மாநகர ஆணையாளருக்கு பிடியாணை உத்தரவு

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று (02) பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தூர்நாற்றம் வீசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில், கல்முனை மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி ரோசன் அக்தாரால் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் கல்முனை மாநகர ஆணையளர் உள்ளிட்ட எட்டுப் பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை, கல்முனை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று (02) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ.அன்சார் மன்றில் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராக கல்முனை நீதவானினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த வழக்கு செப்டெம்பர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X