Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 மார்ச் 22 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபைக்கு புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு, சபை நடவடிக்கைகள் மற்றும் தமது பொறுப்புகள், செயற்பாடுகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படுமென, மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் சுயேச்சைக்குழு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றியீட்டிய மருதமுனை எம்.எஸ்.எம்.ஹாரிஸ் (நவாஸ்) சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு, மாநகர சபை செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே, ஆணையாளர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"புதிய கலப்பு முறையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்குப் போட்டியிட்ட சுயேட்சைக் குழுக்களில் சாய்ந்தமருது தோடம்பழ சின்ன சுயேட்சைக்குழுவும் மருதமுனை ஹெலிகொப்டர் சின்ன சுயேட்சைக்குழுவுமே நேரடியாக வட்டாரங்களில் வெற்றியீட்டியுள்ளன.
“கல்முனை மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்ட பின்னர் தற்போது மூன்றாவது ஆட்சி நிர்வாக சபை அமையவுள்ளது. இதுவரை 19 உறுப்பினர்களைக் கொண்டிருந்த எமது மாநகர சபையினரின் எண்ணிக்கை தற்போது 41 உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
“தெரிவு செய்யப்பட்டிருப்போரில் பெரும்பாலானோர் புதிய உறுப்பினர்களாவர். அதனால் சபை நடவடிக்கைகள் தொடர்பிலும் தமது பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படும்.
“இதற்காக எமது மாநகர சபை மட்டத்திலும் மாகாண சபை மட்டத்திலும் கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.
“எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் இடம்பெறவுள்ள அங்குரார்ப்பண அமர்வின்போது, எமது மாநகர சபைக்கான புதிய மேயர், பிரதி மேயர் ஆகியோர், உறுப்பினர்களிடையே நடத்தப்படும் இரகசிய அல்லது பகிரங்க வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்" என்றார்.
50 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
52 minute ago
1 hours ago