2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பி.எம்.எம்.ஏ.காதர், அப்துல்சலாம் யாசீம்

கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக மருதமுனையைச் சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரி எம்.சி.அன்சார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிவரும் வேளையே, இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தனது கடமையை, நாளை மறுநாள் (10) பொறுப்பேற்கவுள்ள இவருக்கான நியமனத்தை, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம இன்று (08) வழங்கிவைத்தார்.

இவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற பகுதிகளில் பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X