2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேற்றம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, நூருள் ஹுதா உமர், ரீகே.றஹ்மத்துல்லா,  ஏ.எல்.எம். ஷினாஸ், சர்ஜுன் லாபீர், பாறுக் ஷிஹான்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் விசேட அமர்வு, இன்று (02) காலை 10 மணியளவில் மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ஆரம்பமாகி, பிற்பகல் 12.30 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த அமர்வுக்கு மாநகர சபையின் 41 உறுப்பினர்களில் 39 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். இவர்களில் 24 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 15 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 12 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 05 உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 04 உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒரு உறுப்பினர், ஹெலிகொப்டர் சுயேட்சைக்குழுவின் ஓர் உறுப்பினர் மற்றும் மான் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஓர் உறுப்பினர், தேசிய காங்கிரஸின் ஓர் உறுப்பினர் மற்றும் சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவின் 08 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X