Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, எஸ்.அஷ்ரப்கான், சகா, பாறுக் ஷிஹான் எம்.என்.எம்.அப்ராஸ்
கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான ரஹ்மத் மன்சூர், போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக பதவி வகித்து வந்த காத்தமுத்து கணேஷ், மாநகர சபையின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டமையால் அப்பதவி வெற்றிடமானதையடுத்து, பிரதி மேயரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், இன்று (12) நடைபெற்றது.
இதன்போது, பிரதி மேயரை தெரிவுத் செய்வதற்கான தேர்தலை, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன் நடத்திவைத்தார்.
தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்மொழியுமாறு அவர் சபையைக் கோரியபோது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், மு.கா உறுப்பினர் ரஹ்மத் மன்சூரின் பெயரைப் பிரேரித்தார். அதனை மு.கா உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் ஆமோதித்தார்.
இதன்போது, வேறு பெயர்கள் எதுவும் முன்மொழியப்படாததால் வாக்கெடுப்பின்றி, பிரதி மேயராக ரஹ்மத் மன்சூரை பிரகடனம் செய்வதாக, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.
இந்த சபை அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினரும் ஹெலிகொப்டர் மற்றும் மான் சின்னங்களைக் கொண்ட சுயேட்சைக்குழுக்களின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய காங்கிரஸ் மற்றும் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 May 2025
12 May 2025