Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
கல்முனை மாநகர சபைக்கு நியமிக்கப்படும் ஆணையாளர்கள் பதவியேற்பதை தொடர்ச்சியாக தடுத்து வருகின்ற கல்முனை மேயருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் எச்சரித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரால் கல்முனை மாநகர ஆணையாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஏ.எல்.எம்.அஸ்மி, நேற்று முன்தினம் (08) கடமைகளை பொறுப்பேற்கச் சென்றபோது, கல்முனை மேயரால் அவர் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் கல்முனை மாநகர ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட என்.சிவலிங்கம், கடந்த ஏப்ரல் முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்கச் சென்றபோதும் அவரும் தடுக்கப்பட்டார்.
இவ்வாறு தொடர்ச்சியாக கல்முனை மாநகர ஆணையாளர்கள் பதவியேற்காமல் தடுக்கப்படுவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரை தொடர்புகொண்டு வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஆளுநர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"மாநகர சபையின் நிர்வாக செயற்பாடுகளில் மேயர் ஒருபோதும் தலையிட முடியாது. எனக்குரிய அதிகாரத்தின் கீழ், மாநகர ஆணையாளர் நியமனத்தை மேற்கொண்டுள்ளேன். இதனை ஒருபோதும் கல்முனை மேயர் சவாலுக்குட்படுத்த முடியாது.
“இதனால், கல்முனை மாநகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்க மேயர் அனுமதிக்க வேண்டும்.
“அவ்வாறில்லாமல், தொடர்ச்சியாக ஆணையாளர்கள் கடமைகளை பொறுப்பேற்பதற்கு இடையூறு விளைவிக்கப்படும் பட்சத்தில், கல்முனை மேயருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025