2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கல்முனை மேயர் ஆஸி. விஜயம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், சனிக்கிழமை (17) அவுஸ்திரேலியா பயணமாகின்றார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ள ஆர்.எம்.ஐ.ரி. பல்கலைக் கழகத்தில், இம்மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஒரு வாரகால செயலமர்வில் பங்குபற்றுவதற்காகவே இவர் அங்கு செல்கின்றார். இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தால் இவர் இச்செயலமர்வுக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

மாநகர சபைகளின் சொத்து நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி கட்டுமாணம், திண்மக் கழிவகற்றல் சேவையில் எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்ளல், நிலைபேறான அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து இந்தச் செயலமர்வில் ஆராயப்படவுள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களுக்கான களப் பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தச் செயலமர்வில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியா செல்லும் கல்முனை மாநகர மேயர், சில முக்கிய நகர மேயர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளை நடாத்தி, கல்முனை மாநகர அபிவிருத்திக்கான ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டிருப்பதாக மேயர் செயலகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .