Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
A.K.M. Ramzy / 2020 மே 07 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம்.அப்ராஸ்,நூருல் ஹுதா உமர்
கொவிட் 19 இடர் நிலையினால் வாழ்வாதர ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்களுக்கு புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு
பேரீச்சம்பழம் வழங்கும் செயற்றிட்டம் கல்முனை யன்ஸ் போரமினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர் பீ. எம் சன்ஸீர் தலைமையில்
நடைபெற்ற நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இச் செயற்றிட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
கல்முனையன்ஸ் போரம் விடுத்த வேண்டுகோளுக் கமைய 6 தொன் பேரிச்சம் பழத்தினை பெஸ்ட் புட் மார்கடிங் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தினர் நன்கொடையாக வழங்கியிருந்தனர்.குறித்த பேரீச்சம்பழமானது அம்பாறை மாவட்டத்திலுள்ள
சகல பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புகளுடாக இணங்கானப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட
விருக்கின்றன. பல்வேறு சமூக நல வேலைத் திட்டத்தின்முன்னெடுத்து வருகின்ற கல்முனையன்ஸ் போரமானது நாட்டில் நிலவும் கொவிட்-19 இடர் நிலையில் சுமார் 1.1
மில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் நிவாரணங்களாக கடந்த ஏப்ரல் மாதம் கல்முனையன்ஸ் போரம் கல்முனை பிராந்திய த்தில் விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கல்முனை பிரதேச செயலக உதவிதிட்ட மிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர் , தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்முனையன்ஸ் போரத்தின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago