2025 மே 14, புதன்கிழமை

கல்முனை வர்த்தக சங்கத்தால் நிதியுதவி

Editorial   / 2020 மே 07 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அஷ்ரப்கான்

கொரோனா வைரஸ் தொற்றின்  காரணமாக, அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவும் வகையில், கல்முனை வர்த்தக சங்கம், சுமார் 70 இலட்சத்துக்கும் மேற்பட்ட நிதியை, கல்முனை பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களிடம் இருந்து அறவீடுசெய்து, கல்முனை பிரதேசத்தில் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு வழங்கியுள்ளது.

இச்செயற்றிட்டத்தை, கல்முனை வர்த்தக சங்கத்தினர் 3 கட்டங்களாக செயற்படுத்தி வருகின்றனர். அதில் கல்முனை, கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்திலுள்ள மக்களுக்கு ரூபாய் 968,000 நிதியும், கல்முனை இஸ்லாமாபாத் மக்களுக்கு ரூபாய் 750,000 நிதியும் பள்ளிவாசல்கள் ஊடாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, கல்முனைக்குடி பிரதேசத்திலுள்ள மக்களுக்கு, அங்குள்ள 19 பள்ளிவாசல்களின் ஊடாக, நிவாரணத்திற்கான நிதி, வர்த்தக சங்க தலைவர் கே.எம். சித்தீக்கின் தலைமையில் கல்முனை மாநகர சபை சபா மண்டபத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X