2025 மே 05, திங்கட்கிழமை

கல்முனையில் 1,569 பேர் தனிமைப்படுத்தலில்

Princiya Dixci   / 2020 நவம்பர் 25 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள 13 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் 562 குடும்பங்களைச் சேர்ந்த 1,569 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

இவர்களில் 1,274 பேரின் பிசிஆர் பரிசோதனை மாரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 80 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும், பாலமுனை கொரோனா சிகிச்சை நிலையத்தில் 63 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்துக்கு தொழிலுக்காகச் சென்று கல்முனைப் பிராந்தியத்துக்கு வருகை தருபவர்கள் தங்களை பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறும், வீடுகளில் கட்டாயம் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமெனவும் அவர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X