Editorial / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்கும் மக்கள் சமூக இடைவெளியைப் பேணி, முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டுமென, அவர் தெரிவித்தார்.
கல்முனை பிராந்தியத்தில் 32 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாமெனவும், சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வெளியில் செல்ல வேண்டாமெனவும், இதனை உதாசீனம் செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பணிப்பாளர் தெரிவித்தார்.
வெளி மாவட்டங்களில் இருந்து எமது பிரதேசத்துக்கு வருபவர்கள் தொடர்பாக அறிவிக்குமாறும் கேட்டுள்ள அவர், பொதுமக்கள் ஒன்றுகூடும் சந்தைகள், வணக்கஸ்தலங்கள் ஆகிவற்றில் சுகாதார நடைமுறைகளைப் பேணுமாறும், கேட்டுள்ளார்.
இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில், சுகாதாரப் பகுதியினர் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026