Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 23 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டுமெனக் கோரி, ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டமும் அதற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டமும் இன்று (23) நண்பகலுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
கல்முனை சுபத்ரா ராமய விஹாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், இந்த உண்ணாவிரதத்தை முடித்துவைத்து உரையாற்றியாற்றினார்.
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு கூடிய விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்துரெலிய ரத்ன தேரரும் கலகொட அத்தே ஞானசார தேரர் போன்றோராலும், அரசாங்கத் தரப்பினராலும் வழங்கப்பட்ட உத்தரவாதங்களை ஏற்றுக்கொண்டே, தமது உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு செய்யப்படுவதாக, சங்கரத்ன தேரர் தனதுரையில் தெரிவித்தார்.
தமது கோரிக்கையில் தாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும் குறித்த காலப்பகுதியினுள், தமிழ்ப் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாவிட்டால், தமது போராட்டம் மீண்டும் மிகப்பெரியளவில் வெடிக்கும் எனவும், அவர் சூளுரைத்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதால், தாம் ஏற்கெனவே அறிவித்ததன் பிரகாரம், தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறைவு செய்வதாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
இணக்கமான தீர்வு எட்டப்படும் வரை, தாம் விழிப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார். இறுதியாக துஆப் பிரார்த்தனையுடன், சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவுக்கு வந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
7 hours ago