2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் எரிவாயு வழங்குதலில் முறைகேடு

Princiya Dixci   / 2022 ஜூலை 21 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகரில் சமையல் எரிவாயு விநியோகத்தில் முறைகேடுகள் மற்றும் அரசியல் தலையீடுகள் இருப்பதால், தமக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் பாரிய இடர்பாடுகள் இருப்பதாக, கல்முனை பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கல்முனை எரிவாயு விநியோகத்தில் மக்கள் பிரதிநிதிகள் சிலர் தலையிட்டு, அவர்களின் ஆதரவாளர்களுக்கும் குடும்பத்தினருக்கு வழங்கி வருவதாக பொதுமக்கள் முயையிடுகின்றனர்.

கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதேச செயலகத்தையும் தாண்டி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சிலர், சமையல் எரிபொருளுக்கான டோக்கன்களை வழங்கி, தமக்கு வேண்டியவர்களுக்கு சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்கின்றனர்.

இந்த வாய்ப்பானது அவர்கள் கட்சி சார்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. அதிலும் சிலர் தனது நெருங்கிய குடும்பத்தினர், தீவிர ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி பங்கிடுவதால், பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன.

இந்த விடயம் தொடர்பில், கல்முனை பிரதேச செயலாளர், அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாமல் பொறுப்புவாய்ந்த அரச அதிகாரியாக செயற்பட்டு தேவையுடைய மக்களுக்கு கிராம சேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர்கள் ஊடாக சமையல் எரிவாயுவை ஒழுங்கான முறையில் சகலருக்கும் கிடைக்க ஆவன செய்யுமாறு, பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .