Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2020 மார்ச் 08 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
நாளை 09ஆம் திகதி திங்கட்கிழமை - கல்முனை, நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 04ஆம், 12ஆம் கொலனி, நிந்தவூர் சில பகுதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரையும், மின் தடைப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை - சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வங்கலாவாடி, சம்புமடு, ஹிச்ராபுரம் ஆகிய பிரதேசங்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.
11ஆம் திகதி புதன்கிழமை - நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மீலாத்நகர், அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.
13ஆம் திகதி வெள்ளிக்கிழமை - கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி ஆகிய பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரையும், மின் தடைப்படும்.
14ஆம் திகதி சனிக்கிழமை - நிந்தவூர், சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, காரைதீவு ஆகிய பகுதிகளில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.
16ஆம் திகதி திங்கட்கிழமை - சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 வரையும், மின் தடைப்படும்.
17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை - சம்மாந்துறை, கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வங்கலாவாடி, சம்புமடு, ஹிஜ்ரா புரம், கல்முனை நகரம், பாண்டிருப்பு, மணல்சேனை, மருதமுனை, பெரியநீலாவணை ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.
19ஆம் திகதி வியாழக்கிழமை - சம்மாந்துறை, சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வங்கலாவாடி, சம்புமடு, ஹிஜ்ராபுரம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 வரையும், மின் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago