Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 07 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
எரிபொருள் உரிய முறையில் கிடைக்க ஆவண செய்யுமாறு கோரி முச்சக்கர வண்டி சாரதிகள் இன்று (7) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டமானது அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் ஆரம்பித்து மாநகர பகுதியினுடாக ஊர்வலமாக சென்று பின்னர் கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திலும் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் தங்களுக்குரிய எரிபொருள் உரிய முறையில் கிடைக்க ஆவண செய்யுமாறு மகஜர்களை கையளித்துள்ளனர்.
இதன் போது தாம் எரிபொருள் பிரச்சினை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், அத்தியவசிய சேவை என சில துறையினருக்கு எரிபொருள் வழங்கப்படுவதாகவும், எமது சேவையும் அத்தியவசிய சேவையின் ஒரு பகுதியாக கருதி எமக்கான எரிபொருளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரக்கை விடுத்தனர்.
2 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
4 hours ago
6 hours ago